Random image

குழந்தை கடத்தல் வதந்தி: சென்னையில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்

சென்னை:

னியாக நின்றிருந்த 4 வயது குழந்தையை பாதுகாக்க எண்ணி விசாரித்த வடமாநில இளைஞர்கள் 2 பேரை அந்த பகுதியை சேர்ந்த 8 பேர் கும்பல் அடித்து உதைத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நேற்றிரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வட மாநிலங்களில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் காரணமாக பல்வேறு அசம்பாவி தங்கள் நடைபெற்று வருகின்றன.  உண்மையிலேயே குழந்தைகளுக்கு உதவுபவர்களும், குழந்தையை கடத்துபவர் என்று எண்ணப்பட்டு, அதுகுறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதையடுத்து அப்பாகிகள் பலர்  பொதுமக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில், குழந்தையை கடத்துபவர்கள் என்று எண்ணி 2 வட மாநில இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தின் போது, அந்த தெருவில், 4 வயது அவினாஷ் என்ற குழந்தையின் தாய் வரலட்சுமி  அருகிலுள்ள கடைக்கு சென்றபோது, அவரை தொடர்ந்து தனியாக அவினாஷ் வந்துள்ளான். இதை அறியாத வரலட்சுமி விறுவிறுவென்று சென்று விட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபால் சாகு (வயது 22), வினோத் விகாரி (வயது 25) ஆகியோர் தனியா நின்றுகொண்டிருந்த அந்த 4 வயது குழந்தையை பாதுகாக்கும் நோக்கில் பேச்சு கொடுத்துள்ளனர்.

இதை கண்ட ஒருசிலர் அவர்கள்  குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். அந்த இளைஞர்கள் தாங்கள் இந்த பகுதியில் வசித்து வருவதாக கூறிய நிலையிலும், மேலும் 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்து உள்ளனர். இது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக குழந்தைகள் கடத்தல் குறித்த வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதன் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அப்பாவிகள் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர், குழந்தையை கடத்த வந்திருப்பதாக கருதி அந்த பகுதி மக்களால் அடித்துக்கொல்லப்பட்டனர்.

வடமாநிலங்களில் அதிகரிவரும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் காரணமாக தற்போது சென்னையில்  இரண்டு வட மாநிலத்தை சேர்ந்த  அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்கள். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு   திருவண்ணாமலை அருகே ருக்மணி என்ற முதிய பெண்மணி குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக அடித்துக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகள் கடத்தல் வதந்தி காரணமாக அப்பாவிகள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.