வால்பாறை:

வால்பாறை அருகே குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை  வனத்துறையினர் வைத்த கூண்டில்  சிக்கியது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள  நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள வீட்டு வாசலில் கடந்த 8ந்தேதி விளையாடிக் கொண்டிருந்த செய்யதுல் என்ற 4வயது குழந்தையை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதைகக்ண்ட அந்த பகுதி பொதுமக்கள் குழந்தையை காப்பாற்ற எண்ணி சிறுத்தையை விரட்டிச் சென்றனர்.

இந்நிலையில்,  சுமார்,  ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேயிலைச் செடிகளுக்கு அடியில் குழந்தையின்  தலை தனியாகவும் உடல் தனியாகவும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களும் சிறுத்தையை பிடிக்க கோரி போராட்டம் நடத்தினர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த   காவல் துறையினர், வட்டாட்சியர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர்.

நடுமலை எஸ்டேட், சிஎஸ்ஐ சர்ச் வளாகம், பொதுப்பணித்துறை குடியிருப்பு மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று அதிகாலை நடுமலை எஸ்டேட் பகுதியில் குழந்தையை இழுத்துச் சென்ற பகுதியில்  வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.