குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் – உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கடுமை 

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரிகளை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகிலேயே அதிகளவு குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் அறிக்கை கூறுகிறது. உலகில் நடக்கும்  குழந்தைத் திருமணத்தில் 40 சதவீதம்  இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கு 23 மில்லியன் இந்திய குழந்தைகள் பலியாகின்றனர். உத்தரகண்டில் 5.5%  ஆண்கள் 21 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்கிறார்கள். 1.8% பெண்கள் 18 வயது நிரம்புவதற்கு முன்னதாக திருமணம் செய்துகொள்கிறார்கள்.

குழந்தைத் திருமணத்தை தடுக்க கோரிய பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் குழந்தை திருமணத்தை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. குழந்தை திருமணம் தடுய்ப்பு சட்டத்தை அமல்படுத்தி, அத்திருமணங்களை தடுத்து நிறுத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் தான் குழந்தைத் திருமணம் அதிகளவில் நடக்கிறறது என்றும் அதனால் பாலின பாகுபாடு அதிகரிக்கிறறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: உத்தரகண்ட், குழந்தை திருமணம், நீதிமன்றம்
-=-