சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் செய்த காமுக தாத்தா கைது!  சமூக வலைத்தளங்களால் நடந்த நன்மை!

தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியில்  ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நூலக கட்டிடத்தில்  நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த  ஒன்பது  வயது சிறுமிக்கு  சின்னசாமி என்ற முதியவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
u

இதை கல்லுாரி மாணவர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  அப்படங்கள், மிகவும் வைராலாகியதுடன், பாலியல் தொந்தரவு அளித்தவர் மீது கடும் நடவடிக்கை தேவை என நெட்டிசன்கள் கோரிக்கை வலியுறுத்தினர்.

இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர்,  சின்னா என்ற முதியவர்தான், அந்த காமுகன் என்பதை கண்டறிந்தனர். தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.