சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வின்போது, குழந்தையின் எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில்  6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கொந்தகை உள்பட 4 இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 19ஆம் தேதி  கொந்தகையில்  சுரேஷ் என்பவரின் இடத்தில் நடைபெற்ற  அகழாய்வுப் பணியின் போது, முதுமக்கள் தாழிக்கள் கண்டுபிடித்த நிலையில், அதிலிருந்து எழும்புக் கூடுகள் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இந்தச் சூழலில், தற்போது  அருகே தோண்டியபோது அங்க குழந்தையின் முழு எலும்புக் கூடு தெரிய வரவே, மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எலும்புக் கூட்டை சேதாரம் இல்லாமல் எடுக்க முயன்ற னர். அதனால் முழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதாரம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு சுமார் 95 செ.மீ நீளம் இருந்துள்ளது.
இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளைம் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.