Random image

குழந்தை கடத்தல் வதந்தி பரப்புவோர் கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் கிரண்ரஜ்ஜூ

டில்லி:

நாடு முழுவதும் குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக அப்பாவி பொதுமக்களும், மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வலியுறுத்தி உள்ளார்.

கடந்த மாதத்தில் மட்டும் சமூக வலைதளங்களில் பதவிய குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக சுமார் 20 பேர்  அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம், தெலுங்கானா, அசாம், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்பட பல  மாநிலங்களிலும் குழந்தை கடத்தப்படுவதாகக் கூறி அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதன் உச்சக்கட்டமாக, இரண்டு நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் 5 பேர் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அந்த பகுதி  கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், குழந்தை கடத்தல் வதந்தி மற்றும் பொய்ச் செய்தியைப்  பரப்புவோர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ  அறிவுறுத்தி உள்ளார்.

வதந்தி மற்றும் பொய் செய்திகளைப் பரப்புவோர் மீது மாநில அரசுகள் கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளும், தன்னார்வ குழுவினரும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ  வலியுறுத்தியுள்ளார்.