வயலில் பிறந்த குழந்தை… தூக்கிச்சென்ற வன விலங்கு…

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள ஜோதாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஷில்பா என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

அவரது வீட்டில் கழிப்பறை இல்லாததால், அருகே உள்ள வயல்வெளிக்கு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் பிரசவ வலி ஏற்பட, வயல்வெளியிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

கொஞ்ச நேரத்தில் மயங்கிச் சரிந்து விட்டார்.

கண் விழித்துப் பார்த்தபோது, குழந்தையைக் காணவில்லை.

வன விலங்கு பச்சைக் குழந்தையைத் தூக்கிச் சென்றிருந்தது.

ஷில்பாவை இரண்டு மணி நேரம் காணாததால், வயல்வெளிக்குத் தேடி வந்த உறவினர்கள், நிகழ்ந்த அவலம் குறித்து அறிந்து அதிர்ந்து போனார்கள்.

ஷில்பாவை மட்டுமே அவர்களால் உயிருடன்  மீட்க முடிந்தது. அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.