ரொம்ப பேஷனா பேர்  வைக்கிறாங்களாம்…’’

ரொம்ப பேஷனா பேர்  வைக்கிறாங்களாம்…’’

மாதிரி புகைப்ப்டம்

விவஸ்தை கெட்டதனமாகப் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்து ‘பேஷன்’ என்று சொல்லிக் கொள்வது சில பெற்றோர்களின் வழக்கம்.

கொரோனா தொற்று உலகையே கொலைக்களமாக்கி வரும் நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என வட மாநிலங்களில் சிலர் பெயர் சூட்டி ’’அழகு’’ பார்த்தனர்.

இந்த வியாதி தெற்கேயும் பரவியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ’வெம்பட் டவுண் ‘ என்ற ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு தினங்களுக்கு முன்னர் இரு பெண்கள் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ரமாதேவி என்ற பெண்ணுக்கு மகளும், சசிகலா என்ற பெண்ணுக்கு மகனும் பிறந்தனர்.

பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும், ஆண் குழந்தைக்கு கொரோனா குமார் என்றும் பெயர் சூட்டினார், மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பாட்ஷா.

’பெயர் நல்லா இருக்கா?’’ என்று கேட்டபோது, இரு குழந்தைகளின் பெற்றோரும் ‘’பிரமாதம்’ என்று வழி மொழிந்தது தான், கொடுமை.

ஒரு வேளை அந்த டாகட்ர் , பீசில் சலுகை தருவாரோ?

– ஏழுமலை வெங்கடேசன்