‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ தமிழ் ரீமேக்கில் இசையமைக்க இளையராஜா ஒப்பந்தம்…!

1997-ம் ஆண்டு ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’.

பல்வேறு உயரிய விருதுகளை வென்றுள்ள இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் சாமி வாங்கியுள்ளார்.

‘அக்கா குருவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார்.

கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று ஊரைத் இதற்காக தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை.