ரெயில் நிலையத்தில் ஆதரவற்ற குழந்தைகளாக விடப்பட்ட இருவர் திருமணம்

மும்பை

குழந்தைப் பருவத்தில் ரெயில் நிலையத்தில் ஆதரவற்று விடப்பட்ட இருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

சுமார் 23 வருடத்துக்கு முன்பு 11 வயதான அப்துல் ரஷித் ஷேக் தனது பெற்றோரால் ஆதரவற்று விடப்பட்டார். உல்லாஸ் நகர் அவர் ஆதரவற்ற சிறுவர் இல்லத்தில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிற்கு அவர் தானேவில் உள்ள படேகர் கல்லூரியில் சேர்ந்தார்.

அவருக்கு கல்வித் திறன் இருந்தும் தங்க இடம் இல்லாததால் கல்வியை விட தீர்மானித்தார். அதைக் கவனித்த அந்த பள்ளியின் முதல்வர் சுசித்ரா நாயக் இவருக்கு உதவ முன் வந்தார். அவர் கணவருடன் பேசி அப்துலை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். தனது இரு குழந்தைகளுடன் மூன்றாவதாக அப்துலை அந்தக் குடும்பம் ஏற்றுக் கொண்டது.

கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற அப்துல் பல அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதி வந்தார். ஒரு வருடம் முன்பு அவருக்கு தபால் துறையில் பணி கிடைத்தது. அதை ஒட்டி நாயக் தம்பதியர் அவருக்கு பெண் தேட ஆரம்பித்தனர். ஆனால் தன்னைப் போல் ஆதரவற்ற பெண் ஒருவரை மணக்க விரும்பிய அப்துல் வர்சோவாவில் உள்ள பெண்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து நைமா என்னும் பெண்ணை தேர்ந்தெடுத்தார்.

இருவருக்கும் இந்த மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடந்தது.

நைமாவும் சுமார் 19 வருடத்துக்கு முன்பு நைமாவும் ரெயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed