கட்டணம் செலுத்தாத குழந்தைகளை அறையில் வைத்து பூட்டிய பள்ளி

டில்லி

டில்லி நகரில் ரெபியா பப்ளிக் பள்ளி என்னும் பள்ளிக்கூடத்தில் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை காற்றோட்டமில்லா அறையில் பூட்டி வைத்துள்ளனர்.

டில்லி நகரில் ரெபியா பப்ளிக் என்னும் பள்ளி இயங்கி வருகிறது.    இந்நிறுவனதில் ஏராளமான குழந்தைகள் கல்விக் கற்று வருகின்றனர்.   படிப்பு மற்றும் ஒழுக்க விவகாரங்களில் இந்தப் பள்ளி மிகவும் கண்டிப்பானது என கூறப்படுகிறது.    அதனால் பெற்றோர்கள் இந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை விரும்பி சேர்த்து வந்தனர்.

நேற்று பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வந்திருந்தனர்.  அதில் 16 குழந்தைகள் மிகவும் சோர்வுடனும் அழுதுக் கொண்டும் இருந்துள்ளனர்.   அதிர்ந்து போன பெற்றோர் குழந்தைகளிடம் விசாரித்துள்ளனர்.  அப்போது அந்தக் குழந்தைகள் காற்றோட்டமில்லாத அறையில் புட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

கோபம் அடைந்த பெற்றோர்கள் நிர்வாகிகளை முற்றுகை இட்டு போராட்டம்நடத்தி உள்ளனர்.  அப்போது கல்விக் கட்டணம் செலுத்தாததால்  அந்த பச்சிளம் குழந்தைகள காற்றோட்டமில்லா அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.   ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தினர் மீது குழந்தைகளை கொடுமைப்படுத்தியது மற்றும் சட்ட விரோதமாக அடைந்து வைத்திருந்தது உள்ளிட்ட பிர்வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.