சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’.படம் தமிழில்…..!

10 க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’. (childrenச’s of heaven) உலகம் முழுவதும் இப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்படம் தற்போது தமிழில் ‘அக்கா குருவி’ என்ற தலைப்பில் ரீமேக் ஆகிறது.

இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை வேடத்திற்காக மாஹின் என்ற சிறுவனையும், டாவியா என்ற சிறுமியையும் படக்குழு தேர்வு செய்துள்ளது.

இவர்களுடன் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா வேடத்திலும் செந்தில்குமார் அப்பா வேடத்திலும் நடிக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரமாக ஒரு ஜோடி காலணியும் (Shoes) படத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் ‘அக்கா குருவி’ படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.