குழந்தைகள் விளையாடும் நோட்டுக்களை வழங்கிய ஏ டி எம் : மக்கள் அதிர்ச்சி

--

கான்பூர்

னியார் வங்கி ஏ டி எம் ஒன்றில் குழந்தைகள் விளையாடும் நோட்டுக்கள் வந்துள்ளது உத்திரப் பிரதேச மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் மார்பிள் மார்கெட் என ஒரு பகுதி உள்ளது.    இந்தப் பகுதியில் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் ஏ டி எம் ஒன்று உள்ளது.   இந்த ஏ டி எம் மில் இருந்து சச்சின் என்பவர் பணம் எடுத்துள்ளார்.   அவருக்கு வந்த ரூபாய் நோட்டுக்களில் ஒன்றில் சில்ரன்ஸ் பேங்க் என அச்சிடப்பட்ட குழந்தைகளின் விளையாட்டு நோட்டு ஆகும்

இதனால் அதிர்ச்சி அண்டைந்த சச்சின் ஏடிஎம் காவலாளியிடம் புகார் கூறி உள்ளார்.    அதை அந்தக் காவலாளி புகார் நோட்டில் பதிந்துக் கொண்டிருக்கும் போதே வேறு சிலருக்கும் இதே போன்ற சில்ரன்ஸ் பேங்க் என அச்சிடப்பட்ட விளையாட்டுக் கரன்சிகள் கிடைத்துள்ளன.   தகவல் அறிந்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து பரிசோதித்தனர்.

இன்று மாலைக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு நோட்டுக்கள் அளிக்கப்படும் என அந்த வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   மேலும் ஏ டி எம் மில் வைக்கப்பட்டுள்ள நோட்டுக்களில் விளையாட்டு நோட்ட்க்கள் எப்படி வந்தது எனத் தெரியவில்லை எனவும் இது குறித்து விசாரணை நடைபெறும் எனவும் கூறி உள்ளனர்.