Random image

சீனா: சுரங்க வெடி விபத்தில் 11 பேர் பலி

பெய்ஜிங்:

சீனா லியோனிங் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள 25 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் ஹுனான் மாகாண நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 18 தொழிலாளர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.