புதுடெல்லி: இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கு தங்களுடையது என்று உரிமை கொண்டாடியுள்ளது சீனா.

இதனடிப்படையில், இந்திய ராணுவம் கல்வான்-ஷ்யோக் நதி முகத்துவாரத்தை தாண்டி உள்ளே வரக்கூடாது என்றும் சீனா தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஆனால், மோடியின் அரசு இந்த விஷயத்தில் இதுவரை கோழைத்தனமாக நடந்துகொண்டு வருகிறது.

இந்திய ராணுவ வீரர்களை கொலைசெய்த கையோடு, இந்த மோதலுக்கு காரணமே, இருதரப்பு ஒப்பந்தத்தை இந்தியா மதிக்காமல் மீறி நடந்துகொண்டதுதான் என்றும் சீனா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், மோடியோ தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

“ஒட்டுமொத்த சூழலை விளக்குவதுதான் எனது அறிக்கையின் நோக்கம். அனைவருக்கும் உண்மையைக் கூறியாக வேண்டும். ஏனெனில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய மீடியாக்கள் லடாக் தொடர்பாக தவறான தகவல்களை கூறிவருகிறார்கள்” என்றார் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன்.