மேற்கு வங்கம்: இந்திய ஆதார் அட்டையுடன் சீனா, நேபாள நாட்டினர் சிக்கினர்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தின் செவோக்கே சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சீனாவை சேர்ந்த புஹு வாங், நேபாளத்தை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோர் இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால் மூலம் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புஹு வாங், கணேஷ் பட்டாராய் ஆகியோரது பெயர்களில் இருந்த ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பப்பாய் அகர்வால், கணேஷ் பட்டாராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உடல் நலக் கோளாறு காரணமாக புஹு வாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.