பாகிஸ்தான்: இம்ரானுடன் சீனா, அரேபிய அமைச்சர்கள் சந்திப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் இம்ரான் கானுடன் சீனா, அரேபியா அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வகையில் இன்று சவுதி அரேபியா தகவல் தொடர்பு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அவ்வாட் பின் சாலே அல்-அவ்வாட் இன்று இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் பாகிஸ்தானின் அனைத்து செயல்பாடுகளையும் சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று கூறிய அவர், சவுதி அரேபியாவுக்கு வருமாறு மன்னர் அனுப்பிய அழைப்பையும் இம்ரான்கானுக்கு அளித்தார்.

பாகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனா வெளியுறத்துறை அமைச்சர் வாங் இ, இம்ரான் கானை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: China and saudi Arabia ministers meet pakistan prime minister Imran khan, அரேபிய அமைச்சர்கள் சந்திப்பு, பாகிஸ்தான்: இம்ரானுடன் சீனா
-=-