காற்றுமாசை தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு கோபுரங்கள் அமைக்கும் சீனா… சிலைகளுக்கு செலவிடும் இந்தியா…

பீஜிங்:

பெருகி வரும் வாகன நெருக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மாசினை கருத்தில் கொண்டு காற்றை சுத்திகரிக்கும் நவீன உயர் கோபுரங்களை சீனா அமைத்து வருகிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு பல நகரங்களில் கோடிக் கணக்கில் செலவிடப்பட்டு மிக உயரமான சிலைகளை நிறுவி வருகிறது.

உலக அதிசயங்களான எகிப்தின் பிரமிடுகள், சீனாவின் பெருஞ்சுவர் மற்றும் துபாயின் பாம் தீவுகள் ஆகியவை பட்டியலில், இப்போது குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள 600 அடி உயரம் கொண்ட சர்தார் பட்டேல் சிலையும் சேர்க்கப்பட்டுள்ளது. சிலைக்கு அருகிலுள்ள துறைகளில் நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயிகள் தொடர்ச்சியான வறட்சியை எதிர்கொள்கின்றனர்.

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலை நிறுவப்பட்ட நேரத்தில், சீனா சியான் நகரில் இதேபோன்ற மகத்தான பரிமாணங்களை கொண்ட சுத்திகரிப்பு ஆலையை அமைத்தது. சியான் நகரம், பல இந்திய நகரங்களைப் போல மாசுபாடு கொண்ட நகரமாகும்.

எஃகு கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த 350 அடி உயரம் கொண்ட கிரீன்ஹவுஸ் ஒரு புதுமையான உயர்தர அமைப்பாகும். இது நகரின் மாசுபடிந்த காற்றை உள்ளிழுத்து பலதரப்பட்ட நிலைகளில் சுத்திகரித்து பின் சுத்தமான காற்றாக வளிமண்டலத்தில் மீண்டும் வெளியிடுகிறது.

இதன் பயனானது, சுமார் 10-12 கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டது. இதேபோன்று சுத்திகரிப்பு கோபுரங்கள் சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதும் உள்ள தொழில்துறை நகரங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு சர்தார் பட்டேலின் சிலைக்கு செலவு செய்யப்பட்ட கோடிகளில், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் இதுபோன்ற 200 கோபுரங்கள் கட்டப்பட்டிருக்கலாம், என்பது பலரது கருத்து.

தீர்க்கப்படவேண்டிய முக்கியமான பிரச்சனைகள் நம்மை சுற்றி இருக்கும் பட்சத்தில், அவற்றை கண்டுகொள்ளாமல் அரசு வெறும் சிலைகளை நிறுவுவது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இன்னும் சில நாட்களில், வரலாற்றில் இருந்து இன்னொரு நட்சத்திரத்தின் சிலையும் மும்பையின் அரேபிய கடலில் எழுப்பப்படுகிறது. அந்த 327 அடி உயரமான சிவாஜியின் சிலை ஒரு பெரிய அருங்காட்சியக அடித்தளத்தின் மேல் தெறிக்கும் கடல் அலைகளுக்கு மத்தியில் நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.