டில்லி

ருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகள் எல்லைகள் சந்திக்கும் இடம் உள்ளது.   இந்த இடம் பம் லா எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இங்கிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் சீனா 3 புதிய சிற்றூர்களை உருவாக்கி உள்ளதாகவும் அதன் மூலம் எல்லையை விரிவுபடுத்தி இந்தியாவுக்குள் ஊடுருவத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.,

அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா கிராமங்களை உருவாக்கி இருப்பது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவாகத் தெரிகிறது. கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்திய வீரர்களுடன் சீன வீரர்கள் தள்ளுமுள்ளு வில் ஏற்பட்ட இடத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த கிராமங்கள்  உள்ளன.

சீன நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஆர்வலர் பிரம்மா, “அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த கருத்தைப் பலப்படுத்திக் கொள்ள எல்லைப் பகுதிகளில் ஹான் இன சீனர்களை, திபெத் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும் குடியேற்றச் சீனா திட்டமிட்டுள்ளது. அதையொட்டி அருணாச்சல் – திபெத் – பூடான இணையும் பகுதியில் இருந்து சில கி.மீ. தொலைவில் 3 புதிய கிராமங்களைச் சீனா உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே தென் சீன கடல் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்குச் சீன மீனவர்களை முதலில் அதிகமாகப் பயன்படுத்தியது. இப்போது அதே வழியில் இமயமலை பகுதிகளை ஆக்கிரமிக்க, கால்நடை மேய்ப்பவர்கள், பொதுமக்களைச் சீனா பயன்படுத்தி வருகிறது.” எனக் கூறி உள்ளார்.