Random image

உலகின் மிகப்பெரிய ரசாயண உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து: 19 பேர் பலி

ஷாங்காங்:

லகின் மிகப்பெரிய ரசாயணம் உற்பத்தி செய்யப்படும்  ஆலை சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 19 பேர் பலியானதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் ரசாயண ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைதான் உலகிலேயே அதிக அளவு ரசாயணம் உற்பத்தி செய்யும் ஆலை என்று கூறப்படுகிறது.

இந்த ரசாயண நேற்று இரவு திடீரெனவெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  தீ  பற்றியது. தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியதாலும், அதன் காரணமாக ரசாயணம் எரிந்து புகைமூட்டம்  ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயைணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கோர தீ விபத்தில் இரவு பணியில் இருந்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் ஏற்கனவே . கடந்த 2015 ஆம் ஆண்டு இதுபோல ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.