கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை: ரூபாய் நோட்டுகளை கிருமி நீக்கம் செய்யும் சீனா

பெய்ஜிங்:  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ரூபாய் நோட்டுகளை கிருமி நீக்கம் செய்து சீனா தனிமைப்படுத்தி வைக்கிறது.

1,500க்கும் மேற்பட்டவர்களை கொன்றும் கொரோனா வைரசின் பசி இன்னும் அடங்கவில்லை. பல ஆயிரக்கணக்கானோரை தொடர்ந்து பாதித்து வருகிறது. எப்படியாவது அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா இறங்கி இருக்கிறது.

அதில் ஒரு பகுதியாக, ரூபாய் நோட்டுகள் வழியாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முயற்சித்து வருகிறது. வங்கிகள் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கி உள்ளன.

ரூபாய் நோட்டுக்களை சுத்தப்படுத்த புறஊதா ஒளி, அதிக வெப்பத்தை பயன்படுத்துகின்றன. அதன் பிறகு 14 நாட்கள் அந்த ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தி வைக்கின்றன. பின்னரே அந்த பணம் புழக்கத்துக்கு விடப்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறி உள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை முடிந்தவரை வழங்குமாறு வங்கிகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சீனாவின் மத்திய வங்கியின் துணை ஆளுநர் பேன் இபை தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் நோய் பரவலில் இருந்து பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.

ஆனால் இந்த கிருமி நாசினி பணிகள் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. சீனாவில் பெரும்பாலான மக்கள் ரூபாய் தாள்களுக்கு பதிலாக மொபைல் பேமெண்ட் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: banknotes, china, Corono virus, கொரோனா வைரஸ், சீனா, வங்கிநோட்டுகள்
-=-