பெய்ஜிங்: சீனாவில், 3 மாதங்களுக்கு பின் 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், சீனாவின், உகான் நகரில், கடந்த டிசம்பரில் உருவானது. கடும் பாதிப்பை கண்ட அந்நாட்டில் நீண்ட முயற்சிக்கு பின்னர் கொரோனா கட்டுப்பத்தப்பட்டது.
.இந்நிலையில், 3 மாதங்களுக்கு பின், சீனாவில் உள்நாட்டில், 98 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த மூவர் என்று 101 பேரிடம், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜின்ஜியாங் தலைநகர் உரும்கியில், 89 பேரிடமும், லியோனிங் மாகாணத்தில் எட்டு பேரிடமும், பீஜிங் நகராட்சியில் ஒருவரிடமும் தொற்று உறுதியானது.
புதியதாக பாதிக்கப்பட்டவர்களுடன், சீனாவில் தற்போது, 482 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், 25 பேரின் நிலை, மிக கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில், மீண்டும் அதிக அளவில் தொற்று கண்டறியப்படுவதால், வைரசின் 2வது பரவல் நிலை உருவாகி உள்ளதோ என்று மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.