பெய்ஜிங்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் வெற்றியடைந்து உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பொருளாதாரமும் சரிந்துள்ளது. உலக நாடுகள் பல கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டறிய தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இந் நிலையில் தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி  அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. Ad5 – nCov என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை சீனாவில் உள்ள 108 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்ததில் அது வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
இந்த மருந்து சார்ஸ் வைரஸுக்கும் மருந்தாக பயன்படக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து 2ம் கட்டமாக 501 பேருக்கு இந்த மருந்தை பரிசோதிக்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.