போர் மூண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவா? சீனா மறுப்பு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டால் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் என்று பரப்பப்படும் கருத்தை சீனா மறுத்திருக்கிறது.

pakchine

பாகிஸ்தானுக்கான சீன தூதர் யூ போரான் சமீபத்தில் “பாகிஸ்தானை எந்த நாடேனும் தாக்கினால் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும்” என்று பேசியிருந்தார். இதை சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜெங் ஷூவாங் மறுத்திருக்கிறார்.

ஒரு செய்தியாளார் சந்திப்பில் அவர் பேசும்போது, பாகிஸ்தானுக்கான சீன தூதர் என்ன ஒரு சூழலில் அப்படி கூறினார் என்று தெரியவில்லை ஆனால், காஷ்மீர் பிரச்சனை குறித்த சீனாவின் நிலைப்பாடு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தப் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்பதுதான். இரு நாடுகளுடனும் சீனா நட்பை பேணவே விரும்புகிறது. இதில் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

பாகிஸ்தான் சீனாவின் செல்லப்பிள்ளை என்பது ஊரறிந்த விஷயமாக இருந்தாலும், வெளியுறவுத் துறை பேச்சாளரின் இந்த கருத்து மூலம் இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் சீனா பாகிஸ்தானுக்கு துணை போகும் என்று பரபரப்பாக பரப்பபட்ட வதந்திகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.