உஹானில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைக்க போர் விமானம்: அனுமதி தர மறுக்கும் சீனா

பெய்ஜிங்: இந்தியர்களை அழைத்து வர சீனா சென்றுள்ள இந்திய போர் விமானத்துக்கு அந்நாடு அனுமதி வழங்க மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், உயிரிழப்புகள் நிற்பதாக தெரிய வில்லை. உலகின் பல நாடுகளிலும் இதன் தாக்கம் குறையவில்லை.

சீனாவில் 100க்கும் மேற்பட்டோர் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இந் நிலையில் அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர போர் விமானம் சீனா செல்ல் இருந்தது.

இந்த விமானத்தில் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களும் கொண்டு செல்லப்பட உள்ளன. ஆனால் உஹானில் இருந்து இந்தியர்களைத் திரும்பக் கொண்டு வர இந்திய விமானப்படை அனுப்ப அனுமதி வழங்காமல் சீனா தாமதப்படுத்துகிறது என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், விமானம் செல்ல அனுமதி வழங்குவதில் தாமதம் இல்லை என்று சீன தரப்பு தொடர்ந்து விளக்கம் அளித்துள்ளது.