சென்னை.

சீன எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீன்பிடிப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் என்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பேருந்து மீது  கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாநகர பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதன் காரணமாக காசிமேடு சூரியநாராயணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் சீன எஞ்சின்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கூறியதாவது, தடை செய்யப்பட்ட  சீன தயாரிப்பு எஞ்சின்களை விசைப்படகில் பொருத்தி  அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.  இதன் காரணமாக எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், தடை செய்யப்பட்ட சீன எஞ்சினை விசைப்படகுகளில் இருந்து உடனே அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களை கலைத்து செல்ல போலீசார் வற்புறுத்தினால். ஆனால், அவர்களை கலையாததால் அவர்கள்மீது  போலீசார் தடியடி  நடத்தி கலைத்தனர். இதன் காரணமாக சில மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.