பீஜிங்

சீனா தனது எல்லைப்புற நெடுஞ்சாலை வரைப்படத்தில் இந்தியாவில் இருந்து காஷ்மீர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தை நீக்கி வரைந்துள்ளது.

சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சீனா பாகிஸ்தான் பொருளாதார சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 2016 ஆம் வருடம் அறிவித்தது. இந்த சாலை இந்திய எல்லை ஓரத்தில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை அமைக்கபட உள்ளதால் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆயினும் சாலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சாலை சவுதி மற்றும் ஐரோப்பா வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக சீன அரசு பீஜிங் நகரில் ஒரு அனைத்து நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டியது. இந்த கூட்டத்தில் இந்தியா கலந்துக் கொள்ளவில்லை. கூட்டத்தில் இந்த சாலை செல்லும் நாடுகளின் வரைபடங்களை சீன அரசு தாக்கல் செய்தது. அதில் பல குழறுபடிகள் இருந்துள்ளன.

இந்த வரைபடத்தில் இந்தியாவில் உள்ள காஷ்மீர் மற்றும் அருணாசலப் பிரதேசம் இந்திய எல்லைக்குள் உள்ளதாக காட்டப்படவில்லை. அதாவது இந்த இரு பகுதிகளையும் இந்தியாவில் இருந்து நீக்கி வரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த சாலை அமைப்புக்கு இதுவரைஒப்புதல் தராத நிலையில் இந்த சாலை திட்டத்தில் இந்தியாவும் பங்கு கொள்வதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக தகவல்கல் வெளியாகி உள்ளன.

இந்த வரைபடம் எலைப்புற நெடுஞ்சாலையின் இணைய தளத்திலும் வெளியாகியது. இந்த வரைபடத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது இந்த தளத்தில் இருந்து வரைபடம் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தோ சீன உறவுகள் ஆய்வு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீனா வேண்டுமென்றே இது போல நடந்துக் கொள்வதாக அவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி சீனப்படைகள் தேவை இல்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது/