சீனாவில் காட்டுத்தீ: தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 30வீரர்கள் பலி

சீனாவின் சிச்சுயான் மாகாணத்தில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 30 பேர் தீயில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.

சீனாவின் தென்மேற்கு பகுதியான சிச்சுயான் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீணைய அணைக்க 689 தீயணைப்பு வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீ பிடித்துள்ள பகுதி நிலப்பரப்பிலிருந்து 3,800 மீட்டர் உயரமான பகுதியாகும். இந்த மலைப்பகுதி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு குழுவை சேர்த்ந்த  30 வீரர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை தேடும் பணியில்  இரு ஹெலிகாப்டரில் மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அந்த 30 வீரர்களும் தீயில் சிக்கி பலியானது தெரிய வந்துள்ளது.

வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் வீரர்கள் பலியானதாக சீன அரசு தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.