பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை :  சீனா ஒப்புதல்

பீஜிங்

சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத் வழியாகப் பாயும் நதி ஆகும்,   இந்த அணையின் நீர் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.  எனவே இந்த நதிநீர் குறித்து சர்வதேச ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.   இந்த நதி திபெத்தில் யர்லுங் சாங்போ என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.  திபெத்தின் நீர்வளத்தில் பெரும்பங்கு இந்த நதி நீர் ஆகும்.

சீன அரசின் 14ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த அணையால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசம் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.   மேலும் இது சர்வ தேச பிரச்சினையாக மாறவும் வாய்ப்புள்ளது.

சீனாவின் தரப்பில், “இந்த நதி நீர் சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது.  எனவே இதன் மூலம் 7 கோடி கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.  இந்த மின் உற்பத்தி சீனாவின் மின்சார தேவையில் 30% ஆகும்.  இதன் மூலம் சீனா கார்பன் வெளியீட்டைப் பெருமளவில் குறைக்கும்.  வரும் 2060 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை சீனா முழுமையாகத் தடுக்கும் என்பதால் உலகுக்கு அது நன்மையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.