மிரட்டும் கொரோனா: தமிழகத்தைச்சேர்ந்த சித்தமருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு சீன அரசு அழைப்பு!

சென்னை:

சீனாவில் தினசரி நூற்றுக்கணக்கானோரை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தைச்சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக் காசலத்துக்கு சீன அரசு அழைப்பு!

மிரட்டும்கொரோனா பாதிப்பு: தமிழகத்தைச்சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிக்காசலத்துக்கு சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.  சீன அரசு தூதரகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்து உள்ளார்.

சீனாவின் வுகானில் இருந்து பரவி, உலக நாடுகளை மிரட்ட வரம் கொரோனா தொற்றால், பலம்மிக்க சீனாவே மிரண்டுபோய் உள்ளது. இந்த உயிர்க்கொல்லி வைரஸை சித்த மருத்துவம் மூலம், அழிக்க முடியும் என்று சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த வைத்திய நிபுணரான திருதணிக்காச்சலம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது திருத்திருத்தணிக்காச்சலம் சீனா வர சீனஅரசு அழைப்பு விடுத்துள்ளது  இதன் காரணமாக, விரைவில் இந்திய அரசு அனுமதியுடன் திருத்தணிக்காச்சலம் சீனப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அரசின்  அழைப்பின் காரணமாக, திருத்தணிக்காசலத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும் சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் சவால் -வீடியோ