வாய்ப்பிளக்க வைக்கும் சீனாவின் ராணுவ பட்ஜெட்..!

பீஜிங்: இந்த 2019ம் நிதியாண்டிற்கான சீன நாட்டின் ராணுவ ஒதுக்கீட்டுத் தொகை 177.61 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது இந்தியா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையைவிட 3 மடங்கு அதிகம்!

இந்தவகையில், கடந்த காலங்களைவிட, தனது ராணுவத்திற்கு 7.5% கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. சீன நாணய மதிப்பில், இந்த தொகை 1.19 டிரில்லியன் யுவான்கள் ஆகும்.

இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியிருப்பதன் மூலம், உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்து, ராணுவத்திற்கு அதிகமாக செலவுசெய்யும் நாடுகளில் சீனா இரண்டாமிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இந்த ஆண்டில் தனது ராணுவத்திற்கு ரூ.3.18 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. இது கடந்தாண்டைவிட, 6.87% அதிகம். ஏனெனில், கடந்தாண்டு ரூ.2.98 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

சீன ராணுவத்தைப் பொறுத்தவரை, சமீபகாலங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தனது ராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 3 லட்சம் பேரை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேநேரத்தில், ராணுவத்தை நவீனப்படுத்தி, வெளிநாடுகளில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்கும் வகையிலான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது அந்நாடு.

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-