சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் – சீனா நம்பிக்கை

பிஜிங்:

சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கச் சீனாவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC, டிரோன் தயாரிப்பில் முன்னோடியான DJI டெக்னாலஜி உட்படப் பல முக்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வர்த்தகம் செய்யத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இருப்பினும், புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள ஜோ பிடன் சீனா மீதான தடைகளை நீக்குவது குறித்தும், தளர்வு அளிப்பது குறித்தும் இதுவரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதால் ஜோ பிடன் ஆட்சியிலும் சீனா தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.