சீனா:
சீனா தன்னுடைய கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


 

சீனா தங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய உலக சுகாதார மையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

சீன நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பல குழுக்களுக்கு சீன அரசு கொடுத்துள்ளது, இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த தடுப்பூசியின் சோதனை கட்டங்களும் முழுமையாக முடிக்கப்படவில்லை.

உலக சுகாதார மையத்தின் அத்தியாவசிய மருந்துகளை பரிசோதிக்கும் சொக்கோரோ எஸ்கலேட் என்பவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டிற்கான பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று விவாதம் செய்துள்ளார்.

இதைப் பற்றி உலக சுகாதார மையத்தின் அதிகாரியான சொகொரோ எஸ்கலேட் தெரிவித்ததாவது: இந்த அவசரகால பயன்பாட்டின் மூலம் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மதிப்பிடலாம் அதன்பிறகுதான் இது எங்களுடைய உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.