பீஜிங்

சீனாவில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் ட்ரெயின் மீண்டும் ஓடத்துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது புல்லெட் ரெயில் சேவையை முதலில் ஆகஸ்ட் 2006 முதல் ஆரம்பித்தது.  அப்போது அதன் வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் ஆகும்,  2011 ஆம் வருடம் நடந்த ஒரு விபத்தில் 40 பேர் மரணம் அடைந்து, 191 பேர் காயமுற்றதால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.  பின் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது மீண்டும்  மணிக்கு 350கிமீ வேகத்தில் செல்லும் உலகிலேயே வேகமான புல்லட் ரெயில் சேவையை சீனா துவங்க உள்ளது.  பீஜிங் – ஷாங்காய் வரை 1250 கிமீ தூரமுள்ள இந்த சேவை அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது.  இந்த தூரத்தை இந்த ரெயில் நான்கரை மணி நேரத்தில் கடக்கும்.  மற்ற விரைவு ரெயில் பாதைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.