பீஜிங்

ந்தியப் பிரதமர் மோடியை ஜி 7 மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைத்தது சீனாவுக்கு ஆத்திரம் மூட்டி உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பு ஜி 7 ஆகும்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்டின் தலைவர்கள் கூடி உலகப் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம், கொள்கைகள் குறித்து விவாதிப்பது வழக்கமாகும்   இத வருடம் இந்த சந்திப்பை வரும் செப்டம்பருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒத்தி வைத்துள்ளார்.

அவர் மேலும் தற்போது ஜி 7 என்பது வழக்கொழிந்துள்ளதால் இந்த அமைப்பில் இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை இணைத்து ஜி 11 என மாற்றுவோம் எனத் தெரிவித்தார்.   இதன் அடிப்படையில் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி 7 மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

வர்த்தக பனிப்போர் மற்றும் கொரோனா விவகாரம் போன்றவற்றால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.   டிரம்ப் தற்போது ஜி 7 மாநாட்டுக்கு மோடியை அழைத்தது சீனாவுக்கு ஆத்திரம் மூட்டி உள்ளது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான், “சர்வதேச நாடுகள் மற்றும் அனைத்து அமைப்பு நாடுகள் இடையே பரஸ்பரம் நம்பிக்கையையும் உலக அமைதியையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.  இதுவே பெரும்பான்மையான நாடுகளின் பங்காகும்.

ஆனால் சீனாவுக்கு எதிராக ஒரு சிறிய வட்டத்தை உருவாக்குவது என்பது வரவேற்பைப் பெற வாய்ப்பே கிடையது  இந்த முயற்சி நிச்சயம் தோல்வியில் போய் முடியும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.