லக அளவில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. நவீனத் தொழில்நுட்பத்தின் வழியாக அந்தந்த மொழிகளை அந்தந்த இனத்தினர் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் உலக அளவில் 2 கோடி பேர் பேசும் உய்குர் மொழியைப் பேசும் சில நாடுகளில் வசித்தாலும் பெரும்பான்மை யானோர் சீனாவின் மேற்கில் சின்சியாங் என்ற பகுதியில் வசிக்கின்றனர்.

ஆனால் கடந்த சில வருடங்களாகவே சின்சியாங் பகுதியில் உள்ள உய்குர் இன மக்களின் மீதான தனது கட்டுப்பாடுகளைச் சீனா கடுமையாக்கிவருகிறது. சீினா 2017களில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் நீளமான தாடி வளர்ப்பது ஆகியவற்றின் மீது தடைவிதிக்கப்பட்டது.

மேலும் சீனாவின் சின்சியாங் பிராந்தியத்தில் உய்குர் இன மக்களுக்கான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், காணாமல் போன 1 மில்லியன் உய்குர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், காணாமல் போன குடும்ப உறுப்பினர்களைக் காட்டும் சமூக ஊடக காணொளி பயன்பாடான டிக்டாக்கில் உய்குர்கள் செய்திகளாக அனுப்புகின்றனர்.

டிக்டாக் காணொளியில் குறைந்த நேர அளவிலான காணொளிகளை அனுப்ப உதவும் டிக்டாக் தளம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் உய்குர் இனமக்களின் இம்முயற்சியால் சீனாவின் இன்னொரு கோர முகம் வெளிவந்துள்ளது
உய்குர் இன மக்கள் தாங்கள் அனுப்பும் காணொளிகளில் காணாமல்போனவர்களின் படங்களைக் காண்பிக்கின்றன, அந்த நபரின் புகைப்படம் அல்லது காணொளியைக் காட்டுகின்றன, அதே சமயம் இந்த காணொளிகளை அனுப்பும் பலநபர்கள் அழுதுகொண்டேதான் தங்கள் இடுகைகளை வௌயியிடுகிறார்கள்

சிட்னி பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன சீன வரலாற்று மூத்த விரிவுரையாளரான டேவிட் ப்ரோபி, இந்த காணொளிகள் சின்சியாங்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறிது சுணக்கம் இருப்பதைக் குறிக்கும் அவர் உய்குர் இன மக்கள் இதைச் செய்வதில் ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்

அதே சமயம் அவர்களின் பிரச்சினையைச் சர்வதேச அளவில் கொண்டு செல்ல உய்குர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதையும், இது மாதிரி செய்யும்போது அவர்கள் சமநிலையில் வாழவே ஆசைப்படும் அவர்களின் எண்ணத்தினையும் நாம் அறிந்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்

மேற்கு மாகாணமான சின்சியாங்கில் உய்குர் இன மக்கள் காவல் முகாம்களிலிருந்தாலும் சீனா என்னவோ அவர்கள் இருக்கும் பகுதியைத் தொழிற்பயிற்சி கூடம் என்றும் பள்ளிக்கூடம் என்றும் சீனா கூறி வருகிறது, இதுமட்டுமல்லாமல் பிரச்சாரத்தையும், பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று காட்டுவது பற்றியும் உள்ள உள்ள மக்களை உற்சாகமாகக் காட்டும் காணொளிகளை வெளியிடுவது, போன்ற பணிகளைச் செய்துவருகிறது.

கடந்த ஜூலை மாத இறுதியில் நடந்த ஒரு மாநாட்டில், அரசின் பிராந்திய தலைவர் ஷோஹ்ரத் ஜாகிர், மையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் 90% பேர் பொருத்தமான வேலைகளைத் தேடிச் சென்று “கணிசமான பணம்” சம்பாதித்து வருவதாகக் கூறினார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, “ProveThe90” என்ற ஹேஷ்டேக்குடன், இன்னும் காணாமல் போன தங்கள் குடும்பத்தினர், நண்பர்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கினர்.

பிப்ரவரியில், 2017 ஆம் ஆண்டில் சின்சியாங்கில் காணாமல் போன பிரபல உய்குர் இசைக்கலைஞர் அப்துரேஹிம் ஹெய்ட்டின் மரணம் குறித்த வதந்திகளை அகற்றும் முயற்சியில், சீன அரசு ஊடகங்கள் ஹெயிட் அவரது உடல்நிலையை உறுதிப்படுத்தும் காணொளியை வெளியிட்டன. காணொளியில், அவர் காவலில் இருப்பதாகவும், “ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை” என்றும் கூறினார்.

இதற்குப் பதிலளித்த ஆர்வலர்கள் மற்றும் உய்குர் புலம்பெயர் உறுப்பினர்கள் #MeTooUyghur என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் உறவினர்களின் வாழ்க்கை காணொளிகளை நிரூபிக்க அழைப்பு விடுத்தனர்.

இதையெல்லாம் டிக்டாக் வழியாகக் கொண்டுவரும் உய்குர் இன மக்கள் , சீன சமூக ஊடக பயன்பாடான வீசாட் செயலி வழி தொடர்புகொள்வதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள், ஏனெனில் இது சீனா அரசால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

முகாம்களுக்கு அனுப்பப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை அணுகச் சீனாவுக்கு வெளியே உள்ள உய்குர்கள் போராடி வருகின்றனர். சின்சியாங்கில் உள்ளவர்கள் சீனாவுக்கு வெளியே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது ஆபத்தானதது என்றாலும் அம்மக்கள் இன்னமும் போராடிக்கொண்டுதான் உள்ளனர்

இவ்வளவு குறைகளை தன்னகத்தில் வைத்துள்ள சீனா, முஸ்லிம் நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றது என்பதை அவர்களே அறிந்துகொள்ளவேண்டும்.

டுவிட்டர் இணைப்பு

-செல்வமுரளி