லடாக்,.

டாக் எல்லை பகுதியில் சீனா மீண்டும்  ஊடுருவ முயற்சி செய்தது. இதை இந்திய வீரர்கள் தடுத்தனர். சீனாவின் அத்துமீறிய செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது.

சீனாவின் பணிகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து. சீனாவின் பணிகளை  இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. இதைத்தொடர்ந்து  எல்லையில் 3,000 வீரர்களை இந்தியா உடனடியாகக் குவித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்திய- சீன எல்லைப் பகுதியான காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றுள்ளது. அப்போது தடுத்த இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியதில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்து உள்ளனர். இச்சம்பவத்துக்கு முதன்முறையாக இந்தியா அதிகாரபூர்வ கண்டனங்களை சீனாவுக்கு எதிராகத் தெரிவித்துள்ளது.