இஸ்ரோவுக்கு போட்டியாக சீனாவின் ராக்கெட் சேவை

 

பீஜிங்

ந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்குப் போட்டியாக சீனா செயற்கைக் கோள்களைச் செலுத்தும் ராக்கெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது ராக்கெட் சேவையைப் பல நாடுகளுக்குச் செய்து வருகிறது.   இந்நாட்டின் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.   சமீபத்தில் இந்தியா சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பியது மூலம் விண்வெளி ஆய்வில் முன்னணி நாடுகள் வரிசையில் வந்துள்ளது.

தற்போது வெளி நாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் புதிய ராக்கெட் சேவையைச் சீனா அறிமுகம் செய்துள்ளது.   சீனாவால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ராக்கெட்டுகள் ஸ்மார்ட் டிராகன் 3 எஅ பெயர் சூட்டப்பட்டுள்ளன.  இது விண்வெளிக்கு1.5 டன் வரை எடையுள்ள செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லக்கூடியவை ஆகும்.

சீன நாட்டின் முன்னணி ராக்கெட் நிறுவனமான சீன அகாடமி இந்த ராக்கெட்டை ஞாயிறு அன்று அறிமுகம் செய்துள்ளது.    இது குறித்த செய்தியைச் சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.    இந்த ராக்கெட்டுகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களை விரைவில் சீனா விண்ணில் செலுத்த உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

கார்ட்டூன் கேலரி