சீனா :  குளோனிங் மூலம் உருவான இரு குரங்குகள்

--

ஷாங்காய்

சீனாவின் நீயூரோ சயின்ஸ் அகாடமி குளோனிங் முறையில் இரண்டு குரங்குகள உருவாக்கி உள்ளனர்.

பெர்னார்ட்ஷா விடம் ஒரு நடிகை, ”என் அழகும் உங்கள் அறிவும் இணைந்தால் பிறக்கும் குழந்தை உலகுக்கே ஒரு உதாரணம் ஆகும்.” எனக் கூறியதற்கு அவர், “ஆனால் என் அழகும் உங்கள் அறிவும் இணைந்து குழந்தை பிறந்தால் அது இந்த உலகுக்கே ஒரு தவறான உதாரணம் ஆகும்” எனக் கூறினார்.    ஒரு கர்ப்பத்தில் ஆணின் விந்து மற்றும் பெண் கருமுட்டை சேரும் போது தாய் தந்தையரின் குணாதிசயங்கள் அந்தக் குழந்தைக்கு வரும்.    ஆனால் ஒரு தாயைப் போலவோ அல்லது தந்தையைப் போலவோ முழுக்க முழுக்க இருக்காது என்பதே உண்மை

ஆனால் குளோனிங் முறையில் உருவாகும் உயிருக்கு முழுக்க முழுக்க தந்தை அல்லது தாயைப் போல உருவாக்க முடியும்.   அதாவது 23 ஆணின் செல்கள் மற்றும் 23 பெண்ணின் செல் சேர்ந்து உருவாகுவதற்கு பதில் 46 செல்களும் ஆணிடம் இருந்தோ அல்லது பெண்ணிடம் இருந்தோ எடுத்து செயற்கை முறையில் உருவாக்கப்படுவது தான் குளோனிங் ஆகும்.    இதன் மூலம்  ரஜினிகாந்த் இடம் இருந்து செல்கள் முழுவதும் எடுத்து ரஜினிகாந்தை உருவாக்க முடியும்.   அதே போல ஐஸ்வர்யா ராய் இடம் இருந்து செல்கள் எடுத்து இன்னொரு ஐஸ்வர்யா ராய் உருவாக்க முடியும்.

மனிதர்களை இது போல உருவாக்குவது தவறு என எழுந்த பிரச்சினைகளால் அமெரிக்கா இந்த  ஆராய்ச்சியை ஆட்டுக்குட்டியுடன் முடித்துக் கொண்டது.  ஆனால் சீனாவின் நியூரோ சயின்ஸ் அகாடமி குளோனிங் முறையில் இரு குரங்குக் குட்டிகளை உருவாக்கி உள்ளது.   குரங்குக்கும் மனிதனுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதால்  இது மனிதனை உருவாக்கும் முதல் படி என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.