சர்வதேச கண்டனங்கள் எதிரொலி: காண்டாமிருக கொம்பு, புலி எலும்பு வர்த்தகத்தை நிறுத்திய சீனா

ஹாங்காங்:

காண்டாமிருகங்களின் கொம்பு மற்றும் புலி பாகங்கள் விற்பனையை சட்டப்பூர்வமாக அங்கீ கரித்தது சீனா. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அந்த உத்தரவை நிறுத்தி வைத்து உள்ளது.

அரிய விலங்குகளான காண்டாமிருகம் மற்றும் புலிகள் இனம் அழிந்து வரும் நிலையில் உள்ளது.  இந்த மிருகங்களை பாதுகாப்பு உலகம் முழுவதும் இருந்து வன ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அழிவின் விளிம்பிலுள்ள காண்டாமிருகத்தின் கொம்புகள் மற்றும் புலி எலும்பு களின் வர்த்தகத்தை ஏற்கனவே 1993ம் ஆண்டு சீனா தடை செய்தது. ஆனால்,  கடந்த அக்டோபர் மாதம் தடையை விலக்கி, உள்நாட்டு வர்த்தகத்துக்கு பச்சைக்கொடி காட்டியது.

அதன்படி, காண்டாமிருக கொம்பு மற்றும் புலி எலும்புகள் மருத்துவ ஆராய்ச்சி அல்லது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துவதை சீனா  அனுமதித்தது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் உள்ள  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து,  தனது முடிவில் இருந்து சீனா பின்வாங்கியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள  சீன செயலதிகார கவுன்சிலின் துணை பொது சொயலாளர் டிங் ஸுடோங்,  ஆபத்தான விலங்கு பொருட்களின் மீதான 25 ஆண்டுகால தடையை நீக்குவதற்கான உத்தரவு “ஆய்வுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது” என்று கூறினார். ஆனால், இந்த தடை எவ்வளவு  காலம் நீடிக்கும் என குறிப்பிடவில்லை.

மேலும்,  “சீன அரசாங்கம் நீண்டகாலமாக வனவிலங்கு பாதுகாப்புக்காக அக்கறை காட்டி வருகிறது  மற்றும் அதனுடைய சாதனைகள் உலக நாடுகளால் பாராட்டப்பட்டுள்ளது என்றவர்,  வனவிலங்கு பாதுகாப்பு குறித்த அதன் நிலைப்பாட்டை சீனா மாற்றவில்லை என்றும் சட்டவிரோத கடத்தல் மற்றும் காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் அவற்றின் விளைபொருட்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தை குறைக்காது என்றும் அவர் கூறினார் .

காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடை; விற்பனை, கொள்முதல், போக்குவரத்து, புலிகள் மற்றும் அவற்றின் துணை பொருட்கள் ஆகியவற்றைக் கையாளுவதற்கும்; காண்டாமிருக கொம்புகள் மற்றும் புலி எலும்புகளை மருத்துவத்தில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும், என்ற “மூன்று கடுமையான தடைகளை” சீன அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தும எனவும்  டிங் கூறினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: China makes a U-turn on legalizing tiger and rhino trade following international outcry, சர்வதேச கண்டனங்கள் எதிரொலி: காண்டாமிருக கொம்பு, புலி எலும்பு வர்த்தகத்தை நிறுத்திய சீனா
-=-