பீஜிங்

சீனாவுக்கு ஆதரவாக நடந்துக் கொள்வதாகக் குறை கூறி உலக சுகாதார மையத்துக்கு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதற்குச் சீனா எதிப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவும் போது இது மனிதருக்கு மனிதர் பரவாது எனச் சீனா அறிவித்தது.  அதை ஆமோதித்த உலக சுகாதார சீனாவின் சுதந்திர தின விழாவுக்குப் பல நாட்டினர் சென்ற போது அது குறித்து எச்சரிக்கை அளிக்கவில்லை.  கொரோனா குறித்த உண்மை நிலவரங்களை மக்களுக்குத் தெரிவிக்காமல் மையம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாக அமெரிக்கா  குற்றம் சாட்டியது

அத்துடன் உலக சுகாதார மையத்துக்கு அமெரிக்கா அளிக்கும் நொதிப் பங்களிப்பை நிறுத்தி வைத்துள்ளது.  இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத் துரை அமைச்சகம், “கொரோனா பரவியது முதல் உலக சுசுகாதார் அமைப்பு  அதன் தலைமை இயக்குநர் மூலம் தன் கடமைகளை செல்வனே செய்து வருகிறது.

அப்படி இருக்க மையத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  அனைத்து நாடுகளும் பாதிப்பு அடையும்.  அவ்வளவு ஏன் அமெரிக்காவே பாதிக்கப்படும்.  உலக நன்மைக்காக அமெரிக்கா தன் கடமையை நிறுத்தாமல் செய்ய வேண்டும்.  உலக சுகாதார மையத்துக்கு சீனா தனது முழு ஒத்துழைபியும் அளிக்க உள்ளது” என அறிவித்துள்ளது.