பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்துகிறது சீனா

பொருளாதாரத்தில் தனிப்பெரும் வல்லரசாக திகழ்ந்த பிரிட்டனை 1872 ஆம் ஆண்டு முந்தி முதலிடத்துக்கு வந்த அமெரிக்கா தொடர்ந்து தனது வல்லாண்மையை தக்கவைத்து வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது தனது முதலிடத்தை சீனாவிடம் பறிகொடுத்திருக்கிறது அமெரிக்கா.

shangai

சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமான ஷாங்காய் நகரம்

சமீபத்திய ஐ.எம்.எஃப் கணக்கெடுப்பின்படி அமெரிக்க பொருளாதாரத்தின் மொத்த மதிப்பான 10.8 டிரில்லியன் பவுண்டுகளை முந்தியிருக்கிறது சீனா. அதன் தற்போதைய மொத்த பொருளாதார மதிப்பு 11 டிரில்லியன் பவுண்டுகள் ஆகும். இது வரும் 2019-ஆம் ஆண்டில் 16.7 டிரில்லியன் பவுண்டாக உயரும் என்று ஐ.எம்.எஃப் கணக்கிட்டிருக்கிறது. அது அப்போதைய அமெரிக்க பொருளாதார மதிப்பை விட 20% அதிகமாக இருக்கும். அச்சமயத்தில் அமெரிக்காவின் மொத்த பொருளாதார மதிப்பு 13.8 டிரில்லியன் பவுண்டுகள் மதிப்புடையதாக இருக்கும்.

இந்த மதிப்புகள் “கொள்வனவு ஆற்றல் சமநிலை (பிபிபி)” என்ற மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது அதாவது எங்கு பொருட்கள் விலை மலிவாக இருக்கிறதோ அந்த நாடு பொருளாதார ரீதியாக ஆதாயமடையும். கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவில் ஏற்ப்பட்ட தொழில்துறை வளர்ச்சியே அந்நாட்டை ஒரு பொருளாதார வல்லரசாக உயர்த்தியிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் சீனா இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

அதே நேரத்தில் சில மாறுபட்ட கருத்துக்களும் எழாமல் இல்லை. அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட சீனாவின் மக்கள் தொகை நான்கு மடங்கு அதிகம் எனவே இந்த எண்கள் அடிப்படையிலான கணக்கீடுகளை வைத்து சீனா அமெரிக்காவை முந்தியதாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் சில பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.