Random image

சீனா-கொல்கத்தா இடையே புல்லட் ரெயில் சேவை…..சீனா தூதர் அறிவிப்பு

கொல்கத்தா:

சீனாவில் இருந்து கொல்கத்தாவுக்கு புல்லட் ரெயில் சேவையை தொடங்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று கொல்கத்தாவில் உள்ள சீன தூதரக அதிகாரி மா சான்வு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘கொல்கத்தாவில் இருந்து சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குன்மிங்கிற்கு புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் ஒட்டுமொத்த ஆசியாகவும் இணைக்கப்படும். கொல்கத்தாவில் இருந்து குன்மிங்கிற்கு செல்ல சில மணி நேரங்கள் தான் ஆகும்.

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நாடு. அண்டை நாடுகளுடன் நிலையான உறவை கொண்டிருக்க சீனா விரும்புகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் இந்தியா பொருளாதார வளர்ச்சியை மாற்றி அமைக்க முடியாது’’ என்றார்.

சீனா-இந்தியா இடையிலான வர்த்தக உறவு மற்றும் இணைப்பு குறித்த மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆனால், இது குறித்த தவகல்களை சீனா தூதரக அதிகாரிகள் முழுமையாக வெளியிடவில்லை. பங்களாதேஷ்-சீனா-இந்தியா-மியான்மர் பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தில் இது இணைப்பு நடக்கிறதா? என்பது தெளிவாகவனில்லை.