சீனா: மின் நிலையத்தில் நீராவி குழாய் வெடித்து  விபத்து: 21 பேர் பலி

டங்யாங்:

சீனாவின்   மின்உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு இதில் 21 பேரி தீயில் கருகி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய சீனாவின் ஹுபெய் மாகானத்தில் உள்ள டங்யாங் நகரில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் வெடித்து சிதறியது.

china

இந்த குழாய் வெடி விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டுப்புபடையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 3  பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து  குறித்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வருடம் கிழக்கு சீன நகரமான டியன்ஜின்னில், ரசாயன கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்களை இறந்தது குறிப்பிட்த்தக்கது.