பாகிஸ்தான் தேர்தல் ”அமைதியாக” நடைபெற்றதற்கு சீனா பாராட்டு

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தேர்தலில் பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போது  சீன அதிகாரி ஒருவர் தேர்தல் அமைதியாக நடந்ததற்கு பாரட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்ததில் இருந்தே வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழ ஆரம்பித்தன.   மனித வெடிகுண்டு மூலம் எதிர்க்கட்சி தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.   தேர்தல் நேரத்திலும் பல வன்முறை சம்பவங்கள் நடந்தன.   தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் இம்ரான்ன் கானுடைய பாகிஸ்தான் தெகரீக் இ இன்சாஃப் கட்சி முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.   அதை தொடர்ந்து நவாஸ் ஷெரிஃபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியினர் ஒரு சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.   அதனால் பாக் தேர்தல் ஆணையம் தொழில்நுட்பக் கோளாறை காரணம் காட்டி தேர்தல் முடிவு அறிவிப்பை தாமதம் செய்து வருகிறது.

இதற்கு இம்ரான் கானின் கட்சியினரும் மற்ற எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   தேர்தல் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சீன நாட்டு தூதரக மூத்த அதிகாரி பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  தேர்தல் அறிவித்ததில் இருந்தே நாடு பரபரப்பில் இருந்த போதிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் அதற்காக தேர்தல் ஆணையத்தை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.