பெய்ஜிங்:

சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கழிப்பிட புரட்சி நடத்த அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பு வி டுத்துள்ளார்.

இது குறித்து சீன அரசு செய்தி நிறுவனம் ஜின்ஹுவா வெளியிட்ட செய்தியில், ‘‘சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளின் பட்டியலில் சீனா 4வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 5.9 கோடி சுற்றுலாப் பயணிகள் சீனாவுக்கு வந்தனர். சுற்றுலாத் தலங்களைப் பராமரிப்பது, புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகளைத் தொடர் ந்து மேம்படுத்த வேண்டும்.

இதில் கழிப்பிட மேம்பாடு முக்கியப் இடம் பிடிக்கிறது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப நாடு முழுவதும் கழிப்பிடங்களின் தரத்தை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அக்டோபர் வரையில் நாடு முழுவதும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் 68 ஆயிரம் கழிப்பிடங்கள் மேம்ப டுத்தப்பட்டன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த செய்தியில், ‘‘சீன தேசிய சுற்றுலா ஆணையத்தின் திட்டத்தின் கீழ், வரும் 2018&-2020 ஆண் டுகளில் அனைத்துச் சுற்றுலாப் பகுதிகளிலும் புதிதாக 64 ஆயிரம் நவீன கழிப்பிடங்கள் அமை க்கப்படவுள்ளன. நாட்டில் சுற்றுலாவை அதிகரிக்கவும், சர்வதேசப் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும் கழிப்பிட புரட்சி நடக்க வேண்டும் என்று அதிபர் உத்தரவிட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.