இந்திய மருந்துகளுக்கு சீனா வரி குறைப்பு
பீஜிங்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய்ப்படும் மருந்துகளுக்கு வரிகள் குறைக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை அதிகரித்தது. இதனால் சீனா மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவு படுத்த தொடங்கியது. அத்துடன் ஆசியா பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் இந்தியா, சீனா, லாவோஸ், தென் கொரியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வந்தது, இந்த பேச்சு வார்த்தையில் இந்த நாடுகள் பல பொருட்களுக்கு வரியை குறைக்க ஒப்புக் கொண்டன.
இந்த பேச்சு வார்த்தையின் போது இந்தியாவில் தயாராகும் மருந்துப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது. அத்துடன் மேலே குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 8549 பொருட்களுக்கு வரிக் குறைப்பு செய்ய சீனா ஒப்புக் கொண்டது. இந்தியாவும் இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபடும் 3142 பொருட்களுக்கு வரிக் குறைப்பு செய்ய ஒப்புக் கொண்டது.
இந்நிலையில் சீன அரசு நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு குறிப்பாக புற்று நோய்க்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கபடுகிறது. சீனாவில் தற்போது இந்தியாவின் புற்றுநோய்க்கான மருந்துகளின் தேவை அதிகமாக உள்ளது. இதன் மூலம் இந்தியா வர்த்தகம் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.