சீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றம்!!

பெய்ஜிங்:

சீனாவில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக 355 மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயிரகணக்கான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதிகளில் ஒலி தொந்தரவு ஏற்படுவதாக அருகில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் அருகில் வசிப்பவர்களுக்கு தொந்தரவாக இருந்தது என காரணம் கூறி அகற்றப்பட்டதில் முஸ்லிம்கள் கோபமடைந்துளளனர்.

சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் தன்னிச்சை அதிகாரம் கொண்ட நாடாக ஹூவலாங் ஹூய் உள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த நாட்டில் 355 மசூதிகளில் ஆயிரகணக்கான ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. சீனாவில், இது முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என புகார் எழுந்துள்ளது. இஸ்லாமியர்களின் நம்பிக்கையை சீன அரசு சீர்குலைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

‘‘ஒலி தொந்தரவு காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் தான் ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டது’’ என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ இதழான குளோபல் டைம்ஸ் கடந்த 21ம் தேதி செய்தி வெளியிட்டிரு ந்தது. மேலும், அதில் ‘‘இஸ்லாமியர்கள் தங்களது நம்பிக்கையை சீனா முழுவதும் தொடர எவ்வித தடையும் கிடையாது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் மசூதிகளில் ஏற்பட்ட இந்த சத்தம் காரணமாக ஒலி மாசு ஏற்படுவதாக சுற்றுசூழல் பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன. அதிகாலை நேரங்களில் எங்களை தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தான் இந்த ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டது என்றாலும் இதனால் நோயாளிகளின் இருதயம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. அதனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, இதை தொடர வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சீன அரசு சின்ஜியாங் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களின் செயல்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது மாகாணங்களிலும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மசூதிக்கு செல்ல முடியாத வகையில் புர்கா போன்றவைக்கு தடை வதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.