கொரோனா பாதிப்பு: நேற்று ஒரேநாளில் மட்டும் சீனாவில் 109 பேர் பலி

பீஜிங்:

சீனாவை மிரட்டி வைரஸ் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும்  109 பேர் பலியாகி உள்ளதாகவும், புதியதாக 397 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுஉள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 21ந்தேதிய கண்டீகீடு படி பலியானோர் எண்ணிக்கை 2ஆயிரத்து 236 என்றும்,  75ஆயிரத்து 400 பேர் தாக்கப்பட்டு  சிகிச்சைப் பெற்று வருவதாகவும்,  சீன நாட்டு சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது… இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது மேலும் 397 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள சுகாதார நிறுவனம், நேற்றைய ஒரே நாளில் மட்டும்  109 பேர் பலியாகி உள்ளதாகவும் கூறி உள்ளது. இறந்தவர்களில்  106 பேர் ஹூபே மாகாணத்திலும், ஹெபீ மாகாணம், ஷாங்காய் மற்றும் சிஞ்சியாங்  பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்  தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.