இந்திய எல்லைக்கு மலையேறும் வீரர்கள் & தற்காப்பு கலை நிபுணர்களை அனுப்பிய சீனா!

புதுடெல்லி: ஜூன் 15ம் தேதி, 20 இந்திய ராணுவத்தினரை கொலை செய்யும் முன்னதாக, மலையேறும் வீரர்கள் மற்றும் தற்காப்புக் கலை வீரர்களை, தனது படைகளோடு சேர்த்து, இந்திய எல்லையில் சீனா நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே, ஜூன் 15ம் தேதி ஒரு மோசமான மோதல் ஏற்பட்டது.

எவரெஸ்ட் சிகர ஒலிம்பிக் டார்ச் ரிலே அணியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தற்காப்புக் கலை நிபுணர்களை உள்ளடக்கிய 5 ராணுவப் பிரிவுகளை இந்திய எல்லையில், சீனா நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த மலையேறும் வீரர்கள் மற்றும் தற்காப்பு கலை நிபுணர்கள், ஜூன் 15ம் தேதி, திபெத் தலைநகர் லாசாவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திபெத் தலைநகர் லாசாவில், நூற்றுக்கணக்கான புதிய சீனப் படை வீரர்களின் அணிவகுப்பை சிசிடிவி ஒளிபரப்பு உறுதிசெய்தது.